ஜூன் 26
“போதை இல்லா சமுதாயம் – வளமான இந்தியாவின் அடித்தளம்.”
ஜூன் 26 ஆம் தேதி அனுசரிக்கப்படும் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி – காரைக்கால் நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


போதைப்பொருள் என்பது தனி மனிதனின் உடல்நலத்தையும், மனநலத்தையும் மட்டுமல்லாமல், குடும்பத்தின் அமைதியையும், சமூகத்தின் முன்னேற்றத்தையும் கடுமையாக பாதிக்கும் மிகப்பெரிய சமூகத் தீமையாகும்.


இதனை முன்னிட்டு கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,….
போதைப்பொருளை ஒருபோதும் முயற்சிக்க வேண்டாம்.
நண்பர்களின் தவறான அழுத்தத்திற்கு இடம் கொடுக்காமல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.உடல் மற்றும் மனநலத்தை பாதுகாக்க விளையாட்டு, கல்வி, கலை மற்றும் நல்ல பழக்கவழக்கங்களில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும்.


போதைப்பொருள் பயன்படுத்துதல் அல்லது விற்பனை தொடர்பான தகவல்கள் தெரிந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து சமூகப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


மேலும், “போதைப்பொருளுக்கு இல்லை என்று சொல்வோம்; ஆரோக்கியமான, விழிப்புணர்வான, பொறுப்பான சமுதாயத்தை உருவாக்க ஒன்றிணைவோம்” என்ற உறுதிமொழியை அனைவரும் ஏற்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு மக்களின் நலனும், விழிப்புணர்வும் தான் தனது முதன்மை நோக்கம் என்றும், போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளது.


வழக்கறிஞர் S. திருமுருகன்
தலைவர்,
புதுச்சேரி – காரைக்கால் நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு
S. சிவக்குமார்
BIS Trainer, Government of India
மாநில செயலாளர்,
FEDCOT India Consumer Movement,
புதுச்சேரி மாநிலம் – காரைக்கால் மாவட்டம்
நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *