கோவைபுதூர் பகுதியில் உள்ள வி.எல்.பி ஜானகியம்மாள் கல்வி மற்றும் அறிவியல் கல்லூரியில், புதிய மாணவர்களை வரவேற்கும் வகையில் “வித்யா யாத்திரா 2026” என்ற சிறப்பு அறிமுக மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
கல்லூரி நிர்வாகம் சார்பில் மாணவர்களின் கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு வாய்ப்புகள் மற்றும் வளாக வசதிகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

வி.எல்.பி அறக்கட்டளையின் தலைவர் சூர்ய குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரியின் முதல்வர் டாக்டர் குமார் வரவேற்புரை வழங்கினார்.
கல்லூரியின் வளர்ச்சி, கல்வித் தரம் மற்றும் மாணவர்களுக்காக மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து சிறப்புரைகள் இடம்பெற்றன.

மேலும், மாணவர்கள் கல்லூரி வாழ்க்கையில் வெற்றி பெற தேவையான ஒழுக்கம், திறன் வளர்ச்சி, தொழில்நுட்ப அறிவு மற்றும் சமூகப் பொறுப்புணர்வு குறித்து பேராசிரியர்கள் ஆலோசனைகள் வழங்கினர்.

மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு கல்லூரி நிர்வாகம் முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தன்னம்பிக்கை பேச்சாளரும்,பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளருமான மதுரை ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாடினார்..

நிகழ்ச்சியின் நிறைவில், புதிய மாணவர்களும் பெற்றோர்களும் கல்லூரியின் கல்வி சூழல் மற்றும் வசதிகளை பார்வையிட்டு மகிழ்ச்சி தெரிவித்தனர். புதிய கல்வியாண்டை உற்சாகமாக தொடங்கும் வகையில் நடைபெற்ற “வித்யா யாத்திரா 2026” நிகழ்ச்சி மாணவர்களுக்கு பயனுள்ள மற்றும் ஊக்கமளிக்கும் நிகழ்வாக அமைந்த்து குறிப்பிடதக்கது..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *