நெற்குணப்பட்டு புனித தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலகக் கலை நாள் விழா
கல்பாக்கம் ஜுன் 26
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் நெற்குணப்பட்டு கிராமம் புனித தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலகக் கலை நாள் விழா நேற்று 25 ஆம் தேதி வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் அருட்சகோதரி சுஜி தலைமை தாங்கினார்
பள்ளி முதல்வர் அருட்சகோதரி ஜான்சி வரவேற்றார் இதில் சிறப்பு அழைப்பாளராக எழுத்தாளர் தி பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்
பின்னர் மாணவர்களிடையே அவர் பேசும் போது ஓவியம் சிற்பம் இசை நடனம் போன்ற கலைகள் மனித ஆற்றலை மேம்படுத்தும் சிறந்த கருவியாகும் என்றும் சுய விருப்பத்துடன் கலைகளை மாணவர்கள் கற்கும் போது அறிவுத் திறன் மற்றும் உடல் நலம் மேம்படும் என்றும் பேசினார்
மேலும் மாணவர்கள் அனைத்துக் கலைகளையும் கற்று வாழ்வில் முன்னேற முயற்சிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார் பின்னர், மாணவர்கள் தயாரிப்பில் உருவான அறிவியல் ஓவியம் கைவினைப் பொருட்கள் உட்பட பல்வேறு படைப்புகள் இடம்பெற்ற கண்காட்சியினையும் பார்வையிட்ட அவர் மாணவர்களின் தனித் திறமைகளை வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்