மாதா கோவில் முன்பு நடைபெறும் பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன்.
பணிமய மாதா ஆலய திருவிழா அடுத்த மாதம் துவங்கப்பட உள்ளது அதனை முன்னிட்டு திரேஸ்புரம் முதல் பணிமயமாதா ஆலயம் வரை ரோட்டின் இருபுறமும் பேவர் பிளாக் கல் பதிக்கப்பட்டு வருகிறது இந்த பணி விரைவாக நடைபெற்று வருகிறது
இதனை அடுத்து மாநகராட்சி மேயர் ஜெகன் மாதா கோவில் முன்பு நடைபெறுகின்ற பேவர் பிளாக் கல் பதிக்கும் பணிகளை பார்வையிட்டார் அப்போது அங்கு இருந்த ஒப்பந்ததாரரிடம் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் அடுத்த மாதம் மாதா கோவில் திருவிழா ஆரம்பமாகிறது விரைவாக பணியிலே முடிக்க வேண்டும் தரமான முறையில் பணிகளை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார் மேலும் பேவர் பிளாக் கல் பதிக்கும் விபரங்களையும் கேட்டறிந்தார் பணிகள் முடிந்த பிறகு மேடு பள்ளம் இருக்கக் கூடாது காலி இடத்தில் இருக்கும் மணல்கள் முழுவதையும் அப்புறப்படுத்த வேண்டும் மாதா கோவில் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறும் இருக்கக் கூடாது என்று மேயர் ஜெகன் ஒப்பந்ததாரரிடம் கூறினார்
மேலும் ஒப்பந்ததாரரிடம் அளவு எடுக்கும் டேப்பை கொண்டு வரச் சொல்லி மாநகராட்சி சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது படி நீளம் அகலம் அமைக்கப்பட்டுள்ளதா என்று டேப் மூலம் அளந்து மேயர் ஜெகன் பார்த்தார். மேயர் ஜெகன் கூறுகையில் திரேஸ்புரம் முதல் பணிமயமாதா ஆலயம் வரை ரோட்டில் இருபுறமும் பேவர் பிளாக் கல் பதிக்கும் பணி 90 சதவீதம் முடிவு அடைந்து விட்டது மீதி பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இன்னும் ஒரு சில நாட்களில் பணிகள் முழுவதும் நடைபெற்று விடும் பணிமயமாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழாவின் முக்கிய நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருவார்கள் அதற்காக பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறு இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் ரோட்டின் இருபுறமும் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு வசதியாக பேவர் பிளாக் கல் பதிக்கப்பட்டுள்ளது பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது என்று மேயர் ஜெகன் கூறினார் உடன் திமுக பகுதி செயலாளர் மண்டல தலைவருமான நிர்மல் ராஜ் மாநில மீனவர் அணி நிர்வாகி புளோரன்ஸ் நகர மீனவர் அணி டேனி. போல் பேட்டை திமுக நிர்வாகி பிரபாகர் திமுக நிர்வாகி ஆர்தர் மச்சாது மற்றும் திமுகவினர் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்