கரூர் செய்தியாளர் மரியான் பாபு



கரூர் மாநகராட்சி, தான்தோன்றி மலை அரசு கலைக் கல்லூரி அருகே மாவட்ட ஆட்சித் தலைவர் சி. முத்துக்குமரன் ‘‘ஸ்டார்ட் RUN ஸ்டாப் DRUGS’’ Anti-Drug Run 2026 என்ற விழிப்புணர்வு மாராத்தான் ஓட்டத்தினை கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணி, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சத்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.என். ஹரி கிரண் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் கொடியசைத்து, தொடங்கி வைத்தார்கள்.

அரசு கலைக்கல்லூரி முன்பு தொடங்கி, திண்டுக்கல் செல்லும் சாலையில் வெங்கக்கல்பட்டி பாலம் ரவுண்டானா முன்பு சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியரகம் வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கம் வரை 5 கி.மீ. தூரம் நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உதவி ஆணையர் (கலால் )எஸ்.முருகேசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜே.டேனியல் டேவிட், பள்ளி,கல்லூரிகளை மாணவ, மாணவியர்கள், காவல் துறையினர், அரசு அலுவலர்கள் மற்றும் ஏறாளமான பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.இதில் 14வயது மேல் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *