திருச்சி ஜீன் -26
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒருங்கிணைந்த இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.


கடந்த 24-06-2026 அன்று மண்ணச்சநல்லூர் வட்டாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அடிப்படை இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாம் டாக்டர் T. மணிவண்ணன் DHO (திருச்சி) தலைமையில் நடைபெற்றது.இம்முகாமில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட சமயபுரம் கோவில் இணை ஆணையர் மு.சூரிய நாராயணன் பணியாளர்களின் நலனின் முக்கியதுவம் பற்றி எடுத்து கூறினார். மேலும் இம்முகாமை சிறப்பாக அமைய வழிகாட்டிய சிறுகாம்பூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் J.சிவக்குமார்,சமயபுரம்மருத்துவ அலுவலர் டாக்டர் S. தீபிகா,திருச்சிராப்பள்ளிமாவட்ட ஒருங்கிணைத்த எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு திட்ட மேலாளர் T.விமல் ஆரோக்கியமேரி ஆகியோர்கலந்து கொண்டு விளக்கவுரை வழங்கினார்கள்.

மேலும் மண்ணச்சநல்லூர், சிறுகாம்பூர், ஓமாந்தூர் அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோசகர்கள் மற்றும் ஆய்வக நுட்புணர்கள் PDI மற்றும் நிலா NGO பணியாளர்கள் முகாமை ஒருங்கினைத்து வழிநடத்தினர்.இம்முகாமில் 200 க்கும் மேற்பட்ட சமயபுரம் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *