செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளராக முதுகரை கீதா கார்த்திகேயன் நியமனம்


செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக மகளிர் அணி மாவட்டச் செயலாளராக முதுகரை கீதா கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார் இதற்கான நியமனத்தை, அதிமுக கழகப் பொதுச் செயலாளரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள முதுகரை கீதா கார்த்திகேயனுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.


கழக வளர்ச்சிக்கும், மகளிர் அணி பணிகளை மேலும் வலுப்படுத்தவும் அவர் சிறப்பாக செயல்படுவார் என மாவட்ட நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *