திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்து ஊராட்சி ஒன்றியம் நல்லம நாயக்கன்பட்டி கிராம பகுதியில் சர்வதேச போதைபொருள் ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு நல்லமநாயக்கன் பட்டி பங்கு அருட் தந்தை ஆயர்.ஜெயசீலன் பிரபு அவரது தலைமையிலான சிறப்பு திருப்பலியுடன்,வடமதுரை மகாத்மா மனநல மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர்.ஷர்மிளா பாலகுரு அவரது முன்னிலையில் கிராம மக்களுக்கான போதை தடுப்பு விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி கலையரங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஊர் மணியம்.அமல அரசன், ஊர் கேசியர்.இன்னாசி மற்றும் சிறப்பு அழைப்பார்களாக DDVF ஒருங்கிணைப்பாளர் Er.குழந்தை வேல் இவர்களுடன் Er Ln. அசோக்குமார் நேசனல் பிரஸ் அன் மீடியா அசோசியேசனின் சங்க மாநில தலைவர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் சிறப்பித்தனர்.