தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஒன்பது அம்மா உணவகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த உணவகங்கள் ஏழைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகம் அடுத்து வந்த திமுக ஆட்சியிலும் தொடர்ந்து அம்மா உணவகம் சிறப்பாக நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ள அம்மா உணவகத்திற்கு மாநகராட்சி மேயர் ஜெகன் திடீரென்று சோதனை மேற்கொண்டார்.
மாநகராட்சி மேயர் ஜெகன் சோதனையின் போது அம்மா உணவகத்திற்கு உணவு சாப்பிட வரும் பொதுமக்கள் டோக்கன் கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் தான் உணவு வழங்க வேண்டும் ஆனால் அந்த அம்மா உணவகத்தில் முழுமையாக டோக்கன் வழங்கப்படவில்லை இது ஒரு முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோல அம்மா உணவகத்தை சுத்தமாக சுகாதாரமாக வைக்கவில்லை தூய்மை இல்லாமல் இருந்ததையும் மாநகராட்சி மேயர் ஜெகன் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோல அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் மொத்தமாக வெளியே விற்பனை செய்வதும் சோதனையில் தெரியவந்துள்ளது ஆகையால் அம்மா உணவகத்தில் பல்வேறு மோசடிகள் தவறுகள் நடப்பதை நேரில் கண்டறிந்த மேயர் ஜெகன் உடனடியாக நடவடிக்கைக்கு தயாரானார்.
அம்மா உணவகத்திற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து இதுபோல பல்வேறு குற்றச்சாட்டுகள் இங்கு நடைபெறுகிறது ஏன் இதனை கண்டு கொள்ளவில்லை எதற்காக நடவடிக்கை எடுக்கவில்லை என்று அதிகாரிகளிடம் மேயர் ஜெகன் கடுமையாக கண்டித்தார். மேலும் மாநகராட்சி ஆணையர் பிரியங்காவை மேயர் ஜெகன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஸ்டேட் பேங்க் காலனி அம்மா உணவகத்தில் நான் சோதனை மேற்கொண்டதில் இதுபோல கண்டறியப்பட்ட புகார் பற்றி கூறினார் ஆகையால் உடனடியாக அம்மா உணவகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. அஞ்சு வருடங்களுக்கு மேல் அம்மா உணவகத்தில் பணியாற்றும் பணியாளர்களை புகார் ஆளான பணியாளர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் மற்ற பணியாளர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மேயர் ஜெகன் உத்தரவிட்டுள்ளார்.
ஏழை மக்கள் பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்டு வரும் அம்மா உணவகத்தில் மேயர் ஜெகன் திடீரென்று ஆய்வு மேற்கொண்டதில் தவறு கண்டறியப்பட்டது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது மேலும் நம்ம உணவகத்தில் இருந்த பணியாளர்கள் நடந்து கொண்ட விதம் முற்றிலும் தவறான விதமாகவே தெரியவந்தது தவறு செய்து விட்டோம் அதனை திருத்துவதை விட்டுவிட்டு தான் தோன்றித்தனமாக அம்மா உணவகத்தில் இருந்த பணியாளர்கள் தெரிவித்தது நடந்து கொண்ட விதம் முற்றிலும் நாம் மாநகராட்சி சார்பில் உள்ள அம்மா உணவகத்தில் பணியாற்றுகிறோம் என்பதை மறந்து செயல்பட்டனர்
என்பது தெரிய வந்தது. ஸ்டேட் பேங்க் காலனி அம்மா உணவகத்தில் ராஜலட்சுமி. தனலட்சுமி. தமிழ்ச்செல்வி. அன்னலட்சுமி. செல்லம்மாள்.. பெரிய நாச்சி. ராணி உள்பட எட்டு பேர் அங்கு பணியாற்றி வருகிறார்கள்
சுழற்சி முறையில் நான்கு பேர் நான்கு பேராக அம்மா உணவகத்தில் பணியாற்றி வருகின்ற என்பது குறிப்பிடத்தக்கது மாநகராட்சி மேயர் ஜெகன் திடீரென்று இன்று அம்மா உணவகத்தில் சோதனை செய்ததில் எடுக்கப்படும் நடவடிக்கை தான் மற்ற அம்மா உணவகத்திலும் பணியாற்றும் பணியாளர்களுக்கு இதுபோல இனி தவறு செய்யக்கூடாது என்ற ஒரு எண்ணம் தோன்றும் வகையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிய வருகிறது அதுபோல புதியதாக அம்மா உணவகத்தில் பணிக்கு வருபவர்களும் இதுபோல தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை உணர்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாநகராட்சி மேயர் ஜெகன் திடீரென்று அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டதில் குற்றம் கண்டறியப்பட்டதால் தற்போது அது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது