தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம் நாள் ரோடு பகுதியில் அமைச்சர் கமலி வரவேற்பு தமிழக வெற்றி கழகத்தினர்.
குண்டடம்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் எஸ். கமலி அவர்களுக்கு குண்டடம் நால்ரோடு அருகே தமிழக வெற்றிக் கழகத்தினர் சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமைச்சர் வருகையையொட்டி பட்டாசுகள் வெடித்து கொண்டாடியதுடன், அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்விடம் முழுவதும் உற்சாகக் கோஷங்கள் எழுப்பப்பட்டு, கட்சித் தொண்டர்கள் ஆர்வமுடன் அமைச்சரை வரவேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி செயலாளர் செந்தில்குமார் முன்னிலையில், வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் உதயச்சந்திரன் தலைமையில், குண்டடம் கிழக்கு ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் நந்தகுமார், குண்டடம் தெற்கு ஒன்றிய செயலாளர் முத்து வடுகநாதர், பேரூராட்சி கழக செயலாளர் தாமரைச்செல்வன்,முன்னால் கிழக்கு ஒன்றிய செயலாளர் சோமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று, அமைச்சருக்கு சிறப்பான மற்றும் உற்சாகமான வரவேற்பை வழங்கினர்.