புவனகிரி ஜூன்-28

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் ஜெயங்கொண்டான் கிராமத்தில்
அமைந்துள்ள அருந்ததியர் மக்களுக்கு சொந்தமான பழமை வாய்ந்த வீரன் கோவில் உள்ளது இந்தக் கோவிலில் நேற்று இரவு சனி பிரதோஷம் தீபா ஆராதனை காண்பிக்கப்பட்டு இரவு கோவிலின் நடை சாற்றப்பட்டு பூசாரி வீட்டுக்கு சென்ற பிறகு மர்ம நபர் கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணம்,பித்தளை குத்துவிளக்கு மற்றும் பித்தளை மணி போன்ற பொருட்களை மர்ம நபர் திருடி சென்றனர் இதுகுறித்து சிதம்பரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்களின் உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்து புவனகிரி காவல் ஆய்வாளர் தேவேந்திரன் அவர்களின் மேற்பார்வையில் மருதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு திருடிச் சென்ற நபரை சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்ததில் அந்த மர்ம நபர் புவனகிரி தாலுக்கா ஆதிவராக நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் பெயர் சக்திவேல் த/பெ, கலியன் வயது 49. என்பது தெரிய வந்தது. இவர் கடலூர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த போது தனிப்படை போலீசார் அவரை மடக்கிப்பிடித்து கைது செய்து திருடிச் சென்ற பொருட்களை கைப்பற்றினர். தனிப்படை போலீசார் 6, மணி நேரத்தில் திருடனை கைது செய்ததால் பொதுமக்கள் காவல்துறை மீது மிகுந்த நம்பிக்கை வைக்கும் விதமாக பாராட்டி வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *