செய்யூரில் இருநாள் கிரிக்கெட் போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, பரிசுத் தொகை வழங்கல்
செய்யூர், ஜூன் 30: கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களின் பிறந்தநாளையும், செங்கல்பட்டு தெற்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் எம்.ஜி.கே. மோகன் ராஜா அவர்களின் பிறந்தநாளையும் முன்னிட்டு, செய்யூர் தொகுதியில் போதையில்லா இளைய சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் லத்தூர் வடக்கு ஒன்றியம் சார்பில் இருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
லத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வெளிக்காடு சி.டி. மோனிஷ்வர், பி.இ., லத்தூர் வடக்கு ஒன்றிய நிர்வாகி பச்சம்பாக்கம் வி. விஜயகுமார் மற்றும் திருவாதூர் ஊராட்சி இ. குணசேகரன் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற போட்டியின் நிறைவு விழாவில், செங்கல்பட்டு தெற்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் எம்.ஜி.கே. மோகன் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுத் தொகைகளை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் இ.எஸ். குருநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலைவாணி, மகளிர் அணி நிர்வாகிகள் லாவண்யா, கீதா, கவிதா, மாணவர் அணி ஒன்றிய நிர்வாகி பிரேம்குமார், தொண்டரணி ஒன்றிய நிர்வாகி மணிஷ் குமார் மற்றும் பெரியவெளிக்காடு ஊராட்சி கழக நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.