கோவை, ஜூலை.19
கோவை வியாபாரிகள் நலச்சங்கம் மற்றும் ஒலிவியா பதிப்பகம் இணைந்து நடத்திய, ‘கல்வித்தந்தை தலைவர் காமராஜர்’ நூல் வெளியீட்டு விழா மற்றும் கல்வித் திருவிழா கோவையில் இன்று காலை நடைபெற்றது.
கோவை பொள்ளாச்சி ரோட்டில் உள்ள ஜி.எஸ் மஹாலில் நடைபெற்ற இவ்விழாவிற்கு கோவை வியாபாரிகள் நலச்சங்கத் தலைவரும், நூலாசிரியருமான தா. கருணா ஹரிராம் தலைமை தாங்கினார். கோவை வியாபாரிகள் நலச்சங்கச் செயலாளரும், ஒலிவியா ஸ்டோர்ஸ் உரிமையாளருமான அ.செ. வினோத் முன்னிலை வகித்தார். கோவை வியாபாரிகள் நலச்சங்கப் பொருளாளர் வி. முத்துக்குமார் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் ‘கல்வித்தந்தை தலைவர் காமராஜர்’ என்ற புதிய நூலைஸ்ரீ ராம் பாலிமர்ஸ் நிர்வாக இயக்குனர் சாந்தாராம்
வெளியிட்டார்.
இந்த நூலின் முதல் பிரதியை, தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் கே. விக்னேஷ் பெற்றுக் கொண்டனர். செம்மொழிச் செல்வன் ராகுல்ராம் வாழ்த்துரை வழங்கினார்.
கல்வித் திருவிழாவின் ஒரு பகுதியாக, அரசுப் பள்ளிகளில் பயிலும் 250 மாணவ, மாணவியர்களுக்கு, கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கல்வி ஊக்கத்தொகை மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து நூலாசிரியர் தா. கருணா ஹரிராம் ஏற்புரையாற்றினார். நிகழ்ச்சியை கே.கீதா ராம் தொகுத்து வழங்கினார். நிறைவாக முத்துக்குமார் நன்றியுரை கூறினார். விழா ஏற்பாடுகளை கோவை வியாபாரிகள் நலச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.