மேட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளி சார்பாக உலக அமைதி, போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகிய கருத்துக்களை வலியுறுத்தி சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கான மினி மராத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் 800 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை மேட்டுப்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் கொடியாசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பள்ளி செயலர் சிந்தனை கவிஞர் முனைவர் கவிதாசன் தலைமை தாங்கி மாணவர்களிடம் உரையாற்றினார். அப்பொழுது உலக சமாதானம், போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகியவற்றை மையமாகக் கொண்டு மாணவ செல்வங்கள் ஓடினார்கள், நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்கு அப்துல் கலாம் அவர்கள் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பேசியதை மனதில் வாங்கிக் கொண்டார்கள்.
அதன்படி மனதில் அறம் இருக்கும் என்று சொன்னால் நடத்தையில் ஒழுங்கு இருக்கும் நடத்தையில் அழகு இருந்தால் இல்லத்தில் அமைதி நிலவும் இல்லத்தில் அமைதி நிலவினால் தேசத்தில் அமைதி நிலவும் தேசத்தில் அமைதி நிலவினால் உலகம் அமைதியாக இருக்கும் என்ற அவரது கருத்தை பிரதிபலிக்கும் விதமாக மாணவர்கள் இந்த மினி மராத்தான் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்
என்று கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் முனைவர் உமா மகேஸ்வரி கல்விப் புல முதன்மையர் டாக்டர் ஷீலா கிரேஸ், பள்ளித் துணை முதல்வர் முனைவர் சக்திவேல், உடற்கல்வித்
துறை இயக்குனர் அனிதா உள்பட ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்