தஞ்சை மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரில் போதை பொருள் தடுப்பு விழிப்புணவு நிகழ்வு நடைபெற்றது. கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சி.ராணி தலைமை வகித்தார். வணிகவியல்துறை தலைவரும் , போதை பொருள் தடுப்பு ஒருங்கிணைப்பாளருமான , பேராசிரியர் நா. பழனிவேலு அனைவரையும் வரவேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினராக சுகாதார பணிகள் துணை இயக்குநர்,ராஜு, முன்னாள் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் வே.சௌந்தர்ராஜன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். மருத்துவர் சௌந்தராஜன் பேசும்போது, ஒரு மனிதன் சிகரெட் பிடிக்கும்போது அந்த சிகரெட்டில் 70க்கும் மேற்பட்ட நச்சுபொருட்கள் கலந்துள்ளன.
அதை தொடர்ந்து புகைக்கும் போது இதயத்தின் இரத்த ஓட்டம் பாதிக்கிறது . மேலும் ஹார்ட் அட்டாக், பிரஷர், இரத்த புற்றுநோய், கண், காது, நுரையீரல் இதயம் உள்ளிட்ட ராஜஉறுப்புகளை பாதிக்கிறது
என மாணவர்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மாணவர்கள் இந்த விழிப்புணர்வை அந்தந்த கிராமங்களில் உள்ளவர்களிடம் கூறி புகை பழக்கத்திலிருந்து பாதிக்கப்பட்டவர்களை விடுபட உதவ வேண்டும். மாணவ-மாணவியர்கள் நினைத்தால் சமுதாயத்தை முன்னேற்ற முடியும் என கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியை முனைவர் கு.முத்துகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். நிறைவாக முனைவர் முஸ்தபாகனி அனைவருக்கும் நன்றி கூறி பேசினார்.
பேராவூரணி செய்தியாளர் நீலகண்டன்