தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி வார்டு எண் 2 வைத்தியநாத புரம் பகவதி யம்மன் கோவில் பகுதியில் புதை வடிகால் குழாய் பழுதடைந்து சாலையில் கழிவு நீர் தேக்க மடைந்து தூர் நாற்றம் வீசுவதாக பொதுமக்களிடமிருந்து புகார் வரப் பெற்றதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.வைத்திநாதன் உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையாளர் தமிஹா சுல்தானா நகராட்சி பொறியாளர் மோகன்ராஜ்சுகாதார அலுவலர் அசன் முகம்மது மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் நகராட்சியின் மூலம் குப்பைகள் மற்றும் மரக் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டு தற்போது கழிவுநீர் தேக்க மடையாதவாறு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதி சுகாதாரமான பகுதியாக தற்போது உள்ளது
பொது மக்களின் கோரிக்கையை உடனுக்குடன் நிவர்த்தி செய்த நகராட்சி ஆணையாளர் தமிஹா சுல்தானா மற்றும் நகராட்சி பொறியாளர் மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் நகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு அந்த பகுதி மக்கள் தங்களின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்