மேச்சேரி காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுண்ணுயிரியல் துறை சார்பில் “இயற்கை மருத்துவம் – நோய்களைக் குணப்படுத்தும் அறிவியலை ஆராய்தல்” என்ற தலைப்பில் சிறப்பு விருந்தினர் சொற்பொழிவு நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் செல்வகுமார் தலைமை வகித்து, உயிரித் தொழில்நுட்பத்தின் அவசியம், இயற்கை மருத்துவத்தின் சிறப்புகள் மற்றும் நோய்களுக்கு இயற்கை வழி தீர்வுகளை உருவாக்குவதில் ஆராய்ச்சியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.

நுண்ணுயிரியல் துறைத் தலைவர் தில்லைநாயகி வரவேற்புரை ஆற்றி, இயற்கை மருத்துவம் தொடர்பான அறிவியல் விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். உதவிப் பேராசிரியர் தாரணிப்ரியா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான முனைவர் R.கவிதா, பெரியார் பல்கலைக்கழக உயிரித் தொழில்நுட்பத் துறையின் பேராசிரியர், பங்கேற்று உரையாற்றுகையில் இயற்கை வளங்களிலிருந்து பெறப்படும் மருத்துவக் கூறுகள், உயிரித் தொழில்நுட்பத்தின் பங்கு மற்றும் எதிர்கால ஆராய்ச்சி வாய்ப்புகள் குறித்து சிறப்புரையாற்றி, மாணவர்களை ஆராய்ச்சியில் ஈடுபட்டு சமூக நலனுக்குப் பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு காவிரி கல்வி நிறுவனங்களின் கௌரவ தலைவர் நடேசன், தலைவர் அன்பழகன், செயலாளர் பேராசிரியர் இளங்கோவன், தாளாளர் இராமநாதன்,துணைத்தலைவர் மதன் கார்த்திக், இணைச்செயலாளர் ஹரிசங்கர், ஒருங்கிணைப்பாளர் ரேவதி இளங்கோவன், மாணவர் சேர்க்கையின் புல முதன்மையர் பேராசிரியர் நந்தகுமார், அனைத்துத் துறைத்தலைவர்கள் உதவிப் பேராசிரியர்கள் அனைவரும் வாழ்த்தினைத் தெரிவித்தனர்.

இறுதியாக, உதவிப் பேராசிரியர் சாருப்ரியா நன்றியுரை வழங்கினார். கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *