சீர்காழி கோட்டாட்சியரிடம் திருக்கோயில் மற்றும் திருமடத்திற்கு சொந்தமான இடங்களில் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் கோரிக்கை மனு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் பாலமுருகனிடம், திருக்கோயில் மற்றும் திருமடத்திற்கு சொந்தமான இடங்களில் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவில் கூறியுள்ளதாவது, சீர்காழி நகர் பகுதியில் பெரும்பாலும் சட்டநாதர் கோயில் மற்றும் பல்வேறு கோயில்களுக்கு சொந்தமான மனைகள் உள்ளன.மேற்படி கோயிலுக்கு சொந்தமான இடங்களில் திருக்கோயில் அனுமதி பெற்று மனைகள் அமைத்து ஏழை, எளிய மக்களுக்கு மாத வாடகை அடிப்படையில் வீடுகட்டி குடியிருந்து வருகிறோம். இந்நிலையில் சீர்காழி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், கோயில் இடத்தை இலவசமாக கேட்டு அவருக்கு வழங்கபடாததால் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்.

இதனால் கோயில் மனைகளில் குடியிருப்போர்கள் வாடகை விடுவது,போக்கியம் வைத்து தொகை பெறுவது,பகுதி மாற்றி கொடுப்பது போன்ற செயல்களில் செய்யமுடியாமலும், கோயில் மனைகளில் மின்இணைப்பு,குடிநீர் இணைப்பு பெறுவது போன்ற அத்தியாவசிய செயல்பாடுகள்போன்றவற்றை செய்யமுடியாமல் சிரமப்படுகிறோம்.எனவே கோயில் இடம் குறித்து தவறான செய்தி பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *