தேனி அருகே வீரபாண்டி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட முகாம்

தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டி பூதிப்புரம் பழனி செட்டிபட்டி ஆண்டிபட்டி மேல் சொக்கநாத புரம் ஆகிய பேரூராட்சிகளின் சார்பில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட முகாம் இங்குள்ள தனியார்திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு வீரபாண்டி பேரூராட்சி மன்ற தலைவர் கீதா சசி பூதிப்புரம் பேரூராட்சி மன்ற தலைவர் கவியரசு பால்பாண்டியன் பழனி செட்டிபட்டி பேரூராட்சி மன்ற தலைவர் வி.பி.ஏ.மிதுன் சக்கரவர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினார்

பேரூராட்சி செயல் அலுவலர்கள் மீனாட்சிபுரம் பழனிசெட்டிபட்டி யோக ஸ்ரீ பூதிப்புரம் ராஜேஷ் அய்யனார் முருகன் வீரபாண்டி சா.இளங்கோவன் மேல சொக்கநாத புரம் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த திட்டத்தில் தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கான அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட முகாம் நலத்திட்ட உதவிகளும் தாட்கோ வீட்டு வசதி துறை மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட அரசு சேவைகளுக்கு விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது

இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர்கள் மற்றும் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் தூய்மை பணியாளர்களின் குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேரூராட்சிகளின் சுகாதார மேஸ்திரிகள் சுகாதார பணியாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *