கோவை
கோவை இடையார்பாளையம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் திருக்கோவில் உள்ளது.இக்கோவிலுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து தரிசனம் பெற்று செல்கின்றனர்.
இந்நிலையில் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுவது வழக்கம்.
இதனிடையே ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து மணிகண்ட சிவாச்சாரியார் தலைமையில் ஆடிட்டர் தன்யா குடும்பத்தினர் மற்றும் சுரேஷ்,சுமதி,சிவ கணேஷ், கீர்த்தி ஆகியோரின் குடும்பத்தினரின் ஏற்பாட்டில் அம்மனுக்கு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் அலங்கார பூஜை நடைபெற்றது.தொடர்ந்து அம்மன் தேரில் வலம் வந்தார்.
ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதில் பக்தர்களுக்கு பிரசாதம்,அன்னதானம் வழங்கப்பட்டது.