அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீ பெரிய காண்டி அம்மன் ஸ்ரீ தங்காயி அம்மன் பொன்னர் சங்கர் வாழ்க்கை வரலாறு கதை நிகழ்ச்சி வேலூர் கந்தநகர் சந்தைப்பேட்டை பகுதியில் ஜூலை 8.7.2026ம் தேதி புதன்கிழமையிலிருந்து ஆரம்பித்தது தொடர்ச்சியாக தினமும் மாலை 7 மணி அளவில் கதை பாடும் நிகழ்ச்சி ஆரம்பித்து இரவு 10 மணி வரை நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கந்த நகர் சந்தை திடலில் வினை தீர்க்கும் விநாயகர் கோவில் வளாகத்தில் ஸ்ரீ பெரியகாண்டி அம்மன் ஸ்ரீ தங்காயி அம்மன் மற்றும் அன்னமார்கள் சுவாமிகளின் கதைப்பாடும் நிகழ்ச்சி பொத்தனூரை சேர்ந்த ரமேஷ் பூசாரியின் குழுவினர் உடுக்கை பம்பைமேளம் முழங்க சுவாமி அருள் அழைத்து கதைகள் பாடி வருகின்றனர் தொடர்ச்சியாக தவசு கம்பம் நடப்பட்டது தினமும் ஸ்ரீ பெரிய காண்டி அம்மன் உற்சவர் சிலைக்கு பூஜைகள் நடைபெற்று கதையை ஆரம்பிக்கின்றனர் வெள்ளிக்கிழமை 24/7/2026 மாலை 6 மணி அளவில் பொன்னர் முத்தாயி,
சங்கர் பவளாயி, ஆகிய தம்பதிகளின் திருமணம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஆன்மீக நண்பர்கள் தலைமையில் உடுக்கை பூசாரிகள் இந்த திருமண வைபவ நிகழ்ச்சிகளை வெகு சிறப்பாக நடத்தி வைத்தனர் பொன்னர் சங்கர் முத்தாயி பவளாயி ஆகிய பெண்களின் வேடம் அணிந்து வந்த ஆண்களை பார்த்து பொதுமக்கள் வியந்து பக்தி பரவசத்துடன் கையெடுத்து கும்பிட்டு வழிபட்டனர் இந்த திருமண நிகழ்ச்சியைக்காண சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி தங்களது குடும்பத்தில் நீண்ட நாட்களாக கல்யாணம் ஆகாத கன்னிப் பெண்கள் ஆண்கள் ஆகியோரை அழைத்து வந்து சுவாமியின் பாதங்களைத் தொட்டு ஆசிர்வாதம் பெற்று வழிபட்டு சென்றனர் திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் விபூதி பிரசாதம் வழங்கப்பட்டு
கல்யாண விருந்து அன்னதானம் நிகழ்ச்சி தடபுடலாக நடைபெற்றது.

பொன்னர் சங்கர் திருமண நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை கந்தநகர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த ஊர் பொதுமக்கள் மற்றும் ஆன்மீக நண்பர்கள் வெகு சிறப்பாக செய்திருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *