கரூர் செய்தியாளர் மரியான் பாபு


கரூரில் மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கபடி போட்டி..


கரூர் மாவட்டம் சேலம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள வெண்ணைமலை கொங்கு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் கொங்கு மேல்நிலைப் பள்ளியும் இணைந்து கரூர் மாவட்ட குறுவட்ட அளவிலான மாணவ, மாணவியர்களுக்கான கபடி போட்டி நடை பெற்றது.இப்போட்டியை கொங்கு கல்வி அறக்கட்டளையின் தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து தலைமை வகித்து துவக்கி தொடங்கி வைத்தார். கொங்கு மேல்நிலைப் பள்ளி தாளாளர்
கே.பாலுகுருசுவாமி வரவேற்றார்.

இப்போட்டியானது 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவர்க ளுக்கு நடைபெற்றது. இதில் 40க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 65 அணிகள் கலந்து கொண்டது.இந்நிகழ்வில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பெரிய சாமி, அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் உமா, உடற்கல்வி இயக்குனர்கள் அருணா, சிவா உடற்கல்வி ஆசிரியர்கள் மகாமுனி, ஜெயச்சந்திரன், மணிமாறன், பாஸ்கர், பாலசுப்பி ரமணி, பல்லவி ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டுப்போட்டிகளை ஒருங்கிணைத்தனர். இருதியாக பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ் நன்றி கூறினார்.முன்னதாக அறக்கட்டளையின் தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து மாணவர்களிடம் கூறியதாவது படிப்பில் மட்டும் அல்ல விளையாடிளும் பங்கு பெற்று சாதனை படியுங்கள் என கூறினார்.இந்நிகழ்ச்சியில் மாணவ,மாணவியர்,பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *