புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை பள்ளியில் 57-ஆம் ஆண்டு விளையாட்டு விழா .

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளியில் 57-ஆம் ஆண்டு விளையாட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
​இவ்விழாவிற்கு பட்டுக்கோட்டை மறைவட்ட அதிபர் அருள்திரு ஏ. ஜான் போஸ்கோ அடிகளார் தலைமை வகித்தார். புனல்வாசல் புனித சிறுமலர் அப்போஸ்தலிக்கப் பள்ளி இயக்குனர் அருள்திரு ஏ. சூசை அருள் அடிகளார் பள்ளிக் கொடியினை ஏற்றிவைத்து, விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.


​தொடர்ந்து நடைபெற்ற விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, அறந்தாங்கி துணை வட்டாட்சியர் எஸ். ஆரோக்கிய சேவியர் சிறப்புரையாற்றினார்.
​விறுவிறுப்பான தடகளப் போட்டிகள்:


​இவ்விழாவில் மாணவ, மாணவிகள் இருபாலருக்கும் 100 மீட்டர், 200 மீட்டர், 1500 மீட்டர் ஓட்டப்பந்தயங்கள் மற்றும் தடையோட்டம் உள்ளிட்ட பல்வேறு தடகளப் போட்டிகள் விறுவிறுப்பாக நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு:
​முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் ஏ. ஆல்பர்ட் குணாநிதி​முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சிவசம்பாள் ராமராஜ்​பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கே.எஸ்.ஏ. ஜோசப் ​ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டி வாழ்த்தினர்.

​இவ்விளையாட்டு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளித் தாளாளரும் பங்குத் தந்தையுமான அருள்திரு எஸ். அமுல் வில்லியம், தலைமையாசிரியர் எம்.வி. ஆர்ம்ஸ்ட்ராங், உதவித் தந்தை எஸ். ஜான்பீட்டர், உடற்கல்வி ஆசிரியர்கள் ஏ. ரெட்சகர், ஏ. ராபின் பிராங்கிளின், எஸ். தவசீலா, ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் இணைந்து மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

செய்தியாளர் பேராவூரணி நீலகண்டன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *