தேனி மாவட்டம் கம்பம் நகர் கம்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகரின் மையப்பகுதியான நாட்டுக்கல் மற்றும் கூலத் தேவர் பகுதிகளில் உள்ள அண்ணா திமுக உள்ளிட்ட மாற்று பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தமிழக வெற்றி கழகத்தில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்
ஏ.ஜெகநாத் மிஸ்ரா முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
புதிதாக இணைந்த மாற்று கட்சியின் அனைவருக்கும் தமிழக வெற்றி கழக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழை எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் நகர ஒன்றிய பேரூர் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்