அரியலூரில் ரோட்டரி சங்கம் சார்பில் சிறப்பு குழந்தைகள் நலத்திட்டம் தங்கமே தங்கம் என்கிற பெயரில் சிறப்பாக நடந்தது அரியலூர் அன்னலட்சுமிராஜபாண்டியன் திருமண அரங்கத்தில் ரோட்டரி மாவட்டம் 3000 சார்பில் நடந்த விழாவிற்கு ரோட்டரி சங்கங்களின் மாவட்ட ஆளுநர் ஆர் பி எஸ் மணி தலைமை தாங்கினார்
சிறப்பு குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நலன் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் மண்டல ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் துணை ஆளுநர்கள் ஸ்ரீதர் அமர்நாத் சுரேஷ் கிருஷ்ணா அன்புராஜ் மற்றும் அரியலூர் பெரம்பலூர் ஜெயங்கொண்டம் துறையூர் உள்ளிட்ட பல்வேறு ரோட்டரி சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அரியலூர் ரோட்டரி சங்க தலைவர் பிரபு சங்கர் செயலாளர் மகேந்திரன் மற்றும் அரியலூர் ரோட்டரி உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர் இந்த நிகழ்ச்சி சமூக அக்கறை மனித நேயம் மற்றும் சேவை மனப்பான்மையை வெளிப்படுத்தும் வகையில் குழந்தைகளின் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது என்று ரோட்டரி சங்க தலைவர் பிரபு சங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்