தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே சாக்கடை கழிவுநீர் தேங்கி சாலையில் ஓடும் அவலம்.

தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே சாக்கடை கழிவுநீர் தேங்கி சாலையில் ஓடும் அவலம் ஏற்பட்டுள்ளது. தேங்கிய கழிவு நீரில் கொசு உற்பத்தியாகி வருவதாக மாணவர்கள் குற்றச்சாட்டு, மர்ம நோய்கள் மற்றும் டெங்கு காய்ச்சல் பெருகும் அவல நிலை கண்டு கொள்ளாத நகராட்சி நிர்வாகம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐந்து சாலை சந்திப்பு அருகே செல்லும் சாக்கடை கழிவு நீர் கால்வாயை ஒரு சில நிலத்தின் உரிமையாளர்கள் கழிவு நீர் கால்வாயை அடைத்ததால் கழிவு நீர் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே சாலை ஓரத்தில் தேங்கி சாலையில் ஓடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றை நகராட்சி சுகாதாரத்துறை நிர்வாகத்தினர் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர்.

அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தேங்கிய கழிவு நீர் மூலமாக கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு மலேரியா போன்ற நோய் பரவுவதற்கு அதிக அளவில் வாய்ப்புள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

தாராபுரம் நகரின் மேற்கு பகுதியான அமராவதி சிலை பொள்ளாச்சி சாலை பூக்கடை கார்னர் வழியாக 5 சாலை சந்திப்பு பகுதிக்கு சாக்கடை கழிவு நீர் வருகிறது. இந்த சாக்கடை கழிவு நீர் அங்கிருந்து அமராவதி ஆற்றில் கலக்க செல்கிறது.

அமராவதி ஆற்றுக்கு கழிவு நீர் கால்வாய் கொண்டு செல்லும் வழியில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் மற்றும் தனியார் பார் இருப்பதால் அந்த சாக்கடை கால்வாயை அடைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் 5 சாலை சந்திப்பு மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சாக்கடை கழிவுநீர் செல்வதற்கு வழியில்லாமல் அங்கேயே தேங்கி நிற்கிறது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் சாக்கடை கழிவு கழிவு நீர் தேங்கி நிற்கிறது. மேலும் சாக்கடை கழிவுநீர் தேங்கி சாலையில் வழிந்தோடும் இடங்களில் தனியார் தள்ளுவண்டிக் கடைகளில் பல்வேறு வியாபாரம் மாலை நேரத்தில் செய்து வருகின்றனர். கழிவு நீர் சாலை ஓரத்தில் தேங்கி சாலையில் வழிந்து ஓடுவதால் தள்ளுவண்டி கடைக்காரர்கள் தள்ளுவண்டி அமைத்து வியாபாரம் செய்ய முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை மேலும் ஒரு மாத காலமாக அப்பகுதியில் சாக்கடை கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு தொற்று நோய் பரவி வருகிறது.

மேலும் தாராபுரம் பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும் தாராபுரம் பகுதியில் எந்த பகுதியிலும் சாக்கடை கால்வாய்கள் தூர்வார படாமலும் சாக்கடை கழிவு நீர் ஆங்காங்கே பல நாட்களாக தேங்கி சாலையில் வழிந்து ஓடும் அவல நிலையும் ஏற்பட்டு வருகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *