கோவை

கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு பத்ரகாளியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்..

கோவை இடையர்பாளையம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் திருக்கோவிலில், ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் பக்தி பரவசத்துடன் நடைபெற்றன.

விழாவையொட்டி, ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் பத்ரகாளியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மலர்கள் மற்றும் ஆபரணங்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட அம்மனை தரிசிக்க திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர்.

இதனைத் தொடர்ந்து மணிகண்ட சிவாச்சாரியார் தலைமையில் ரமேஷ்,தேவி குடும்பத்தார் மற்றும் கனகராஜ் கலையரசி குடும்பத்தார் மற்றும் சிவஸ்ரீ செல்வகணபதி சிவாச்சாரியார் ,ரம்யா ஏற்பாடுகளில் அம்மனுக்கு ஸ்ரீவாளி பூஜை, தேர் வடம் வருதல் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பக்தி முழக்கங்களை எழுப்பி அம்மனை வழிபட்டனர்.

பின்னர் பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும் நடைபெற்றது. இதில் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *