தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரத்தில் பாஜக சார்பில் மோடியின் 12 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்.

தாராபுரத்தில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) சார்பில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 12 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டம் மற்றும் மாவீரன் தீரன் சின்னமலைக்கு வீர அஞ்சலி செலுத்தும் பொதுக்கூட்டம் தாராபுரம் காவல் நிலையம் முன்பு நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கார்வேந்தன், குண்டடம் ருத்ர குமார், கொங்கு ரமேஷ், சுகுமார், உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய முன்னாள் எம்.பி. கார்வேந்தன், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 12 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தியுள்ளதாக பேசினார்


பாஐக ஒபிசிஅணி மாநில தலைவர் வீரதிருநாவுக்கரசுசிறப்புரையாற்றிதாவது
ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில்இலவச வீடு, ஜல்ஜீவன் திட்டத்தில்குடிநீர், கழிப்பறை, இலவசஎரிவாயு இணைப்பு, மருத்துவக் காப்பீடு, விவசாயிகளுக்கான நிதியுதவி உள்ளிட்ட ஏராளமான மக்கள் நலத் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.


மேலும், தமிழகத்திற்கு மத்திய அரசு போதிய நிதி வழங்கவில்லை என்று தமிழக அரசு தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைத்து வருவதாகவும், ஆனால் உண்மையில் தமிழக வளர்ச்சிக்காக பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களின் நல

முன்னிறுத்தி செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அவற்றின் பயனை பொதுமக்கள் நேரடியாக பெற்று வருகின்றனர்.இவ்வாறுபேசினார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிற நிர்வாகிகளும் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நாட்டின் முன்னேற்றம் குறித்து விளக்கி உரையாற்றினர். இறுதியாக தீரன் சின்னமலையின் தியாகம் மற்றும் தேசப்பற்றை நினைவுகூர்ந்து வீர அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *