அரியலூரில் நடந்தது பணி நிறைவு பாராட்டு விழா தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி பணி ஓய்வு பெறும் கணக்குப் பிரிவு கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் வாணிப பிரிவு கண்காணிப்பாளர் ராமமூர்த்தி ஆகியோர் பணி ஓய்வு பெறுவதை ஒட்டி அலுவலக வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது

மண்டல மேலாளர் பி சாந்தி அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கினார் தொமுச தலைவர் நாராயணன் அனைவரையும் வரவேற்று பேசினார்

உதவி மேலாளர் முருகன் முன்னிலை வகித்தார் கண்காணிப்பாளர் பழனியப்பன் உதவியாளர் முருகேசன் தொமுச பாண்டியன் அய்யாதுரை அதிமுக ஐயப்பன் திமுக கமல்ராஜ் பாண்டியன் ஐஎன்டியுசி தங்கவேல் சேகர் மற்றும் அனைத்து சங்கங்களின் நிர்வாகிகள் பணி ஓய்வு பெறுபவர்களுக்கு சந்தன மாலைகள் சால்வைகள் நினைவு பரிசுகள் வழங்கி பணி ஓய்வு பெறுபவர்கள் அவர்கள் ஆற்றிய சேவையை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர் பாண்டியன் அனைவருக்கும் நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *