தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே குளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட ED444 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் தினந்தோறும் ஏராளமான விவசாயிகள் பால் வழங்கி வருகின்றனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது அரசு சார்பில் லிட்டர் ஒன்றுக்கு சுமார் ரூ.31 வழங்கப்படுவதாகவும், அதேவேளையில் தனியார் பால் பண்ணைகள் லிட்டருக்கு ரூ.45 வரை வழங்குவதாகவும் பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், கறவை மாடுகளுக்கான தீவனம், புண்ணாக்கு, பருத்திக்கொட்டை உள்ளிட்ட கால்நடை தீவனங்களின் விலை உயர்வு மற்றும் கால்நடை பராமரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளதால், தற்போதைய பால் கொள்முதல் விலை போதுமானதாக இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

கால்நடை வளர்ப்பை நம்பி வாழும் சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, கூட்டுறவு பால் சங்கங்களுக்கு பால் வழங்கி வரும் விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில், பால் கொள்முதல் விலையை உடனடியாக லிட்டருக்கு ரூ.45 ஆக உயர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் பால் உற்பத்தியாளர் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *