சின்னமனூர் அருகே குச்சனூரில் ஆடிப்பெருந் திரு விழா மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் அருள்மிகு சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் மூன்றாம் சனிக்கிழமை ஆடிப் பெருந் திருவிழா நடைபெற்று வருவதைத் தொடர்ந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய ஏதுவாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளான கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கும் வகையில் தற்காலிக புறக் காவல் நிலையம் அமைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதையும் பக்தர்கள் நலனுக்காக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமையும் பக்தர்கள் அதிகம் கூடும் சுரபி நதிக்கரை அன்னதானக் கூடம் உள்ளிட்ட கோவிலின் முக்கிய இடங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா வைத்திநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

உடன் கோவில் செயல் அலுவலர்கள் சுபிதா அ. நதியா கோயில் பரம்பரை அறங்காவலர் தீபன் குச்சனூர் பேரூராட்சி மன்ற தலைவர் பி.டி. ரவிச்சந்திரன் பேரூராட்சி செயல் அலுவலர் சின்னச்சாமி பாண்டியன் உள்ளிட்ட கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அறநிலையத்துறை அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *