ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை குழுவின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் கிளை துவக்க விழா விமர்சியாக நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஏழுமலை, திருவள்ளூர் மாவட்ட பொருளாளர் சுரேஷ்குமார் தலைமையில், மணவாள நகர் கிளை தலைவர் ரமேஷ், மணவாள நகர் கிளை செயலாளர் சந்தோஷ் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி பெயர்ப்பலகை திறப்பு விழா மற்றும் ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் கொடியும் ஏற்றப்பட்டது. பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து 300 பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு,புத்தகம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் அனைத்து தேசிய,மாவட்ட,கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.