தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரி என்.எஸ்.எஸ்.மற்றும் உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை சார்பில் Breast feeding week உலக தாய்ப்பால் வாரம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி நிறுவனச் செயலர் கம்பம் என் இராமகிருஷ்ணன் தலைமையில் கல்லூரி இணைச் செயலாளர் என்.எம்.ஆர். வசந்தன் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் ஆகியோர் தலைமையில் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா கல்லூரி துணை முதல்வர் டாக்டர் வி வாணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது
உணவு மற்றும் ஊட்டச்சத்துத் தலைவர் வி. பாரதி அனைவரையும் வரவேற்றார் கூடலூர் அரசு மருத்துவமனை செவிலியர்கள் டி. நாகலட்சுமி வி. ஜெயலட்சுமி கே. தேவி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசும்போது தாய்மார்கள் பிள்ளைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் தாய்ப்பால் மகத்துவம் குறித்தும் மேலும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான காரணம் அதனை வரமால் தடுப்பதற்கான வழிமுறைகளையும் மாணவிகளுக்கு புரியுமாறு விளக்கிப் பேசியும் இது குறித்த மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனை களையும் வழங்கி பேசினார்கள்.
கணிதவியல் துறை உதவி பேராசிரியர் டாக்டர் ஏ. சரண்யா நன்றி கூறினார் இதைத் தொடர்ந்து கல்லூரியில் இரண்டாம் அமர்வு கல்லூரி என் எஸ்.எஸ் மற்றும் போதைப் பொருள் தடுப்பு குழு Anti Drug Abuse சார்பில் போதை பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
இயற்பியல் துறைத் தலைவர் எம். தவராணி அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி வி.மதியழகன் சாரா குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பவுன்ராஜ் சமூக நல அலுவலர் பவுன் தாய் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று அவர்கள் பேசும் போது இன்றைய சூழ்நிலையில் போதைப் பழக்கத்திற்கு எப்படி அடிமையாகிறார்கள் போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் அந்த பழக்கத்திலிருந்து அவர்களை எப்படி மீட்பது குறித்து விளக்க காட்சி மூலம் எடுத்துப் கூறினார்கள் மேலும் மாணவிகள் பெற்றோர்களை நேசித்து ஒழுக்கத்துடன் நன்றாக படித்து வாழ்வில் வெற்றி அடைய வேண்டும் என்றும் பேசினார்கள். கணினி அறிவியல் துறைத் தலைவர் எம் பாபி நன்றி கூறினார்