துறையூர் ஆகஸ்ட் 07
திருச்சி மாவட்டம் துறையூரில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் முன்னாள் முதல்வர், கலைஞர் மு கருணாநிதியின் 8ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு (ஆக-07) அமைதி பேரணி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அலங்கார வாகனத்தில் கலைஞரின் திருவுருவப் படத்துடன் பாலக்கரையில் இருந்து புறப்பட்ட அமைதி பேரணி திருச்சி ரோடு வழியாக பேருந்து நிலையம் முன்பு உள்ள கலைஞர் சிலை வந்தடைந்தது.அங்குள்ள கலைஞரின் திருவுருவ வெண்கல சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன், நகர கழக செயலாளர் மெடிக்கல் ந.முரளி,முன்னாள் எம்எல்ஏ ஸ்டாலின்குமார்,ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, வீரா என்கிற வீரபத்திரன், சிவசரவணன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கிட்டப்பா, பூபதி,நகர் மன்ற தலைவர் இ.செல்வராணி, முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன்தாஸ், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் அம்மன் பாபு ,வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் நரேஷ் குமார்,விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் செங்கை செல்லமுத்து, வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர் தர்ஷினி திருமூர்த்தி, மகளிர் அணி கிருபா, மாவட்ட ஐடி விங்க் சேகர்,மாவட்ட பிரதிநிதி மதியழகன், கார்த்திகேயன் ,துணை செயலாளர் பிரபு,பொருளாளர் சீனிவாசன்,பேச்சாளர் துரை பாண்டியன்,நகர்மன்ற உறுப்பினர்கள் வீரமணிகண்டன்,நித்யா கிருஷ்ணகுமார், பாஸ்கர், சுதாகர், ஜானகிராமன்,இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கீரம்பூர் முத்துதுரை,எம்கே.சுபாஷ், தொண்டரணி வழக்கறிஞர் யோகராஜ், கிளை செயலாளர்கள் ரெங்கநாதபுரம் கார்த்திக், நடுவலூர் ஜெயராமன், உமாபதி, நரசிங்கபுரம் தளபதி கதிரேசன், மாவட்ட பிரதிநிதி கண்ணனூர் ரவிச்சந்திரன், குமார்,செங்கை பெரியசாமி,இளைஞர் அணி தமிழ்ச்செல்வன், ஸ்டுடியோ சசிகுமார், பா.தமிழ் அழகன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் காவேரி கணேசன், சண்முகம், தமிழ்ச்செல்வன் மற்றும் வீ.சுப்பிரமணியன்,அன்பு காந்தி,18 வது வார்டு மோகன், சசிக்குமார், நல்லுசாமி,மெடிக்கல் பிரேம், ரியல் எஸ்டேட் மணி, பிரேம்,ஆதனூர் ரவிச்சந்திரன், மாணவரணி பிரபாகரன், ஆட்டோ மணி ,வாலீஸ்புரம் கார்த்திக், தமிழ்செல்வன், மற்றும் நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் தொண்டர்கள், மகளிர் அணியினர் கலந்து கொண்டு கலைஞரின் திரு உருவ சிலைக்கு மலர்த்துவி புகழஞ்சலி செலுத்தினர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்