தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம்,
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம் உடுமலை சாலையில் உள்ள ரோட்டரி மஹாலில் இன்று (08.08.2026) மக்கள் குறைதீர்க்கும் மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே இ.ஆ.ப. முன்னிலையில் நடைபெற்ற இம்முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கால்நடைத்துறை அமைச்சர் செ.கமலி ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர்.
முகாமில் பெறப்படும் ஒவ்வொரு மனுவும் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைத்து விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து மனுதாரர்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
மேலும், குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
தொடர்ந்து, பல்வேறு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்திகேயன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வாணிஈஸ்வரி, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.