தஞ்சாவூர் மாவட்டம் :ஆடுதுறை:
ஜேசிஐ அலுமினி கிளப் மண்டலம் 23,கும்பகோணம்,,&மயிலாடுதுறை, கிரேட் இந்தியன் மொபைல்ஸ் , திருபுவனம் லிங்கன் சில்க்ஸ், தஞ்சாவூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் கேஜிஎஸ் மேல்நிலைப் பள்ளியில நடந்தது.
முகாமை ஜேசிஐ அலுமினி கிளப் மண்டலம் 23 தலைவர் இசையாஸ்
தலைமை வகித்து துவக்கி வைத்தார்.திருபுவனம் லிங்கன் சில்க்ஸ் உரிமையாளர் ஜானகிராமன், கும்பகோணம்,கிரேட் இந்தியன் மொபைல்ஸ் உரிமையாளர் இப்ராஹிம்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சிறப்பு மருத்துவ நிபுணா்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்று பொது மக்களின் கண்களை பரிசோதித்தனா். நகரப்புற ,கிராமப்புற பொது மக்கள் என 207 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 45 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு மதுரை அழைத்து செல்லப்பட்டனர்.
அவா்களுக்கு உள்விழி லென்ஸ், அறுவைச் சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து பேருந்து கட்டணம் உள்ளிட்டவை இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டன.
.முகாம் ஏற்பாடுகளை சங்க பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.