பழைய பெருங்களத்தூர்: அருள்மிகு ஸ்ரீ சேணியம்மன் திருக்கோயிலில் 26ஆம் ஆண்டு ஆடி மாத தீமிதி மற்றும் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, 07.08.2026 அன்று ஆடி 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் ஸ்ரீ சேணியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, பகல் 1 மணியளவில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.புகழேந்தி, ரேவதி குடும்பத்தினர் சார்பில் சுமார் 500 பேருக்கு அறுசுவை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.
இந்த அன்னதான நிகழ்வில் பக்த கோடிகளும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா ஏற்பாடுகள் கோயில் நிர்வாகம் மற்றும் விழாக்குழுவினரால் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.