கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் கோவிலில் ஆடி நான்காம் வெள்ளியை முன்னிட்டு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்..

கோவை இடையர்பாளையம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் திருக்கோவிலில், ஆடி மாத நான்காம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் பக்தி பரவசத்துடன் நடைபெற்றன.

விழாவையொட்டி, ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் காய்கறி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காய்கறிகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட அம்மனை தரிசிக்க திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர்.

தொடர்ந்து சிவஸ்ரீ மணிகண்ட சிவாச்சாரியார் தலைமையில் கோவில் அர்ச்சகர் வெங்கடேஷ் சிவம் முன்னிலையில் தீட்சிதன்,சரவணன்,கலாமணி குடும்பத்தார்,சரவணன் , ஜனனி அஸ்வினி குடும்பத்தார், செந்தில்,சுமதி குடும்பத்தார், கிஷோர், கௌசிகா குடும்பத்தார், வெங்கடசுப்பிரமணியம் ,ஸ்ரீவித்யா, குடும்பத்தார், யுவராஜ் காயத்ரி குடும்பத்தார் ஆகியோர்களின் ஏற்பாடுகளில் அம்மனுக்கு ஸ்ரீவாளி பூஜை, தேர் வடம் வருதல் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பக்தி முழக்கங்களை எழுப்பி அம்மனை வழிபட்டனர்.

பின்னர் பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும் நடைபெற்றது. இதில் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *