காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
காங்கயத்தில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி.!
போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி காங்கயத்தில் திங்கள்கிழமை நாடடைபெற்றது.காங்கயம் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற இப்பேரணியை காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். காங்கயம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு துவங்கிய இப்பேரணி காவல் நிலைய ரவுண்டானா, பழைய நகராட்சி அலுவலகம் வழியாக வந்து, பேருந்து நிலையம் அருகே நிறைவுபெற்றது.
இப்பேரணியில், காங்கயம் அருகே நத்தக்காடையூரில் உள்ள காங்கேயம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியின் மாணவ, மாணவிகள் மற்றும் காங்கயம் போலீஸார் கலந்து கொண்டனர்.