காங்கேயம் செய்தியாளர் பிரபு
சொல்:9715328420
காங்கயம் அருகே வெறி நாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழப்பு.காங்கயம் அருகே வெறிநாய்கள் கடித்து 8 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.
காங்கயம் தாலுகா, பாப்பினி அருகே லிங்கப்பக்கவுண்டன் வலசு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (70). விவசாயியான இவர், வீட்டுக்கு அருகே, ஆட்டுப்பட்டி அமைத்து சுமார் 30 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை மாலை மேய்ச்சல் முடிந்து, ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு, வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை வந்து பார்த்தபோது, ஆட்டுப் பட்டிக்குள் 2 ஆடுகள் மற்றும் 6 ஆட்டுக் குட்டிகள் கொடூரமாகத் தாக்கப்பட்டு, இறந்து கிடந்துள்ளது. இதில் மொத்தம் 8 ஆடுகள் உயிரிழந்தன. இப்பகுதியில் சுற்றித் திரியும் நாய்கள் பட்டிக்குள் நுழைந்து கடித்து, ஆடுகள் உயிரிழந்தது தெரிய வந்தது. மேலும், படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 5 ஆடுகளுக்கு இப்பகுதி கால்நடை மருத்துவர் கார்த்திகேயன் சிகிச்சை அளித்தார். மேலும், இறந்த ஆடுகளுக்கு பிரேதப் பரிசோதனையும் நடைபெற்றது.