இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் இரா முத்தரசன் அரியலூரில் பேட்டி அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தை தொடங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அந்த பேட்டியில் அவர் கூறியதாவது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆகஸ்ட் 6 முதல் 15ஆம் தேதி வரை நாடு முழுவதும் பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது

கடந்த 12 ஆண்டு கால பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி தொழிலாளர் விவசாயிகள் மாணவர்கள் பெண்களுக்கு எதிரான ஆட்சியாக செயல்பட்டு வருகிறது மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு சட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் சீர் குளைத்துவிட்டது கடந்த காலத்தில் அது அமல்படுத்துகிற பொழுது அதனுடைய முழு நிதியையும் மத்திய அரசாங்கமே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டது

ஆனால் மோடி அரசு அந்த திட்டத்தின் பெயரை மாற்றி விட்டார்கள் தொகுதி வரையறை மறு சீரமைப்பு என்பது ஒரு மோசடி நாடகம் இந்த மோசடி நாடகத்தை கடந்த ஏப்ரல் மாதம் மக்களவை சிறப்பு கூட்டம் நடத்தி நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்கள்

இந்த அடிப்படையில் 543 என்பதை 880 ஆக உயர்த்துவதற்கு ஒரு போதும் யாரும் ஒப்புக்கொள்ளக் கூடாது என்பதுதான் இந்நிலைப்பாடு பாஜக விரிப்பது சிலந்தி வலை அந்த சிலந்தி வலையின் அகப்பட்ட ஈ-யை அதனுடைய ரத்தத்தை சிலந்தி கொஞ்சம் கொஞ்சமாக குடித்து சாகடிக்கும் அதே மாதிரி தான் ஒவ்வொரு பிரச்சினையும் மோடி அரசாங்கம் சிலந்தி வலை பின்னுகிறது இவ்வாறு முத்தரசன் பேட்டியின் போது செய்தியாளர்களிடம் கூறினார் பின்பு பாஜக அரசின் செயல்பாடுகள் குறித்த துண்டு பிரசுரங்களை மக்களிடம் வழங்கினார்

இந்த மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்திற்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமை வகித்தார் துணைத் தலைவர் டி தண்டபாணி ஒன்றிய செயலாளர் து பாண்டியன் மாணவர் பெருமன்றம் மாநில தலைவர் இப்ராஹிம் கலியபெருமாள் ஆறுமுகம் மருதமுத்து ஆனந்தன் ரமேஷ் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *