காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னாள் பாரதப் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியின்போது மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி தலைமையில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் வினய் குமார் காட்கே மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு அன்னாரது திருவுருவப் படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து மும்மத பிரார்த்தனை செய்யப்பட்டு தேசபக்திப் பாடல்கள் இசைக்கப்பட்டது.

சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம், அமைதி மற்றும் தேசிய ஒற்றுமை ஆகியவற்றை நிலை நாட்ட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

S.செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால்
9385856800

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *