புதுச்சேரி அரசு நிறுவனமான பிப்டிக் மற்றும் தேசிய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் புதுச்சேரி தயாரிப்பு பொருள்களுக்கான “Made in Puducherry” இலச்சினை வெளியிட்டு விழா, புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாண்லே உள்ளிட்ட புதுச்சேரி தயாரிப்பு பொருள்களுக்கான இலச்சினையை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அப்பொழுது அவர் பேசியதாவது:
இந்தியாவில் புதுச்சேரிக்கு என்று ஒரு தனித்துவமான இடம் உண்டு. அதன் வரலாறு, பாரம்பரியம், கட்டிடக் கலை, கலாச்சாரம், சுற்றுலா எல்லாம் புதுச்சேரிக்கு ஒரு தனி அடையாளத்தை தந்து இருக்கிறது.. அந்த அடையாளத்தோடு, உற்பத்தித் திறன் மற்றும் Entrepreneurs திறனையும் இணைத்துக் காட்ட வேண்டிய நேரம் இது. “Made in Puducherry” என்ற பெயரைப் பார்க்கும்போது தரமான தயாரிப்பு என்ற நம்பிக்கை Consumers-க்கு ஏற்பட வேண்டும். தயாரிப்புகளின் தரம், வடிவம், புதுமை, பேக்கிங், நுகர்வோர் அனுபவம் அனைத்திலும் உயர்ந்த தரத்தை பின்பற்ற வேண்டியது அவசியம்.
“Made in Puducherry” என்ற முத்திரையோடு வெளிவரும் ஒவ்வொரு தயாரிப்பும், புதுச்சேரியின் பெயரையும் தன்னுடன் எடுத்துச் செல்கிறது என்பதை நம்முடைய Entrepreneurs நினைவில் கொள்ள வேண்டும்.
அதனால் ஒவ்வொரு தயாரிப்பின் தரமும் அந்த நிறுவனத்தின் பொறுப்பு மட்டுமல்ல; “Made in Puducherry” ஒட்டுமொத்த அடையாளத்தின் நம்பகத் தன்மையை தீர்மானிக்கும்.
நாம் இப்போது உலகளவில் மிகவும் போட்டி நிறைந்த சந்தைச் சூழலில் இருக்கிறோம். நுகர்வோர் ஒரு பொருளின் விலையை மட்டும் பார்ப்பதில்லை. அதன் தரம், வடிவமைப்பு, நம்பகத்தன்மை, தனித்துவம் மற்றும் அது பிரதிநிதித்துவப்படுத்தும் மதிப்பு ஆகியவற்றையும் பார்க்கிறார்கள். எனவே, புதுச்சேரியின் தயாரிப்புகள் மற்ற தயாரிப்புகளிலிருந்து எவ்வாறு தனித்து நிற்க முடியும் என்பதை நாம் தொடர்ந்து சிந்திக்க வேண்டும்.
Innovation, Quality இரண்டும் “Made in Puducherry” முயற்சியின் அடித்தளமாக இருக்க வேண்டும்.
நமது Entrepreneurs புதிய தொழில்நுட்பங்களை ஏற்று, புதிய வடிவ அமைப்புகளை உருவாக்கி, consumer தேவைகளுக்கு ஏற்ப தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல், Environment-க்கு உகந்த உற்பத்தி முறைகள், Resourcesகளை பொறுப்புடன் பயன்படுத்துவது ஆகியவற்றில் புதுச்சேரி முன்னுதாரணமாக உருவாக வேண்டும். “Made in Puducherry” என்பது நாம் எங்கு ஒரு பொருளை தயாரிக்கிறோம் என்பதைக் கூறும் அடையாளமாக மட்டும் இருக்கக் கூடாது; அது தரத்தின், பொறுப்பின், புதுமையின் அடையாளமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு துணைநிலை ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.
விழாவில் முதலமைச்சர் ந.ரங்கசாமி, தொழில்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ், சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் கண்ணன், தலைமைச் செயலர் டாக்டர் சரத் செளகான், தொழில்துறை செயலர் ஏ. விக்ராந்த் ராஜா, தேசிய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சுனில் சுக்லா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
S.செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால் – 9385856800