அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், கிழக்கு ஒன்றியக்குழுவின் சார்பில்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
இதில் கள்ளந்திரி மற்றும் பொருசுபட்டி ஊராட்சிகளில் வி.பி.ஜி ராம்ஜி திட்டத்தில் 125 நாள் வேலையும், ரூ.345 சம்பளமும் வழங்க வேண்டும் என்றும், வறுமையில் வாழும் குடும்பங்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் என்றும் மேலும் வேலை கொடுப்பதற்கு கருவிழி பதிவு ,மற்றும் கை ரேகை பதவி இருந்தால் தான் வேலை என்பதை கட்டாயமாக்கியதை கண்டித்து தமிழக அரசு, மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் கிழக்கு ஊராட்சி ஒன்றிய பி. டி. ஓ.வை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் அழகர்சாமி,ஒன்றிய செயலாளர்
மலர், ஆகியோர் தலைமை வகித்தனர்.இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் உமாமகேஸ்வரன்,
மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.மாயாண்டி ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.பாலா, கிழக்கு ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன் சங்கத்தின் ஒன்றிய துணை செயலாளர் சாமிக்கண்ணு, ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாண்டி, அழகர், ஆயி, சபரி, ராணி
ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.