மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் வரிச்சியூர் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப் பிற்கான பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு தலைமையாசிரியர் தென்னவன் தலைமை தாங்கினார். ஆசிரியர் ராஜவடிவேல் முன்னிலை வகித்தார்.
ஆசிரியை அருவகம் வரவேற்றார்.சிறப்பு பார்வையாளராக ஆசிரியர் பயிற்றுநர்
சிவபார்வதி கலந்து கொண்டார். பள்ளி மேலாண்மை குழுவின் நோக்கம், முக்கியத்துவம், பணிகள், தலைவர் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யும் விதம், வகுப்பு பிரதிநிதித்துவம், தலைவரின் கடமைகள், உறுப்பினர்களின் செயல்பாடுகள், பள்ளியின் வளர்ச்சியில் பள்ளி மேலாண்மைக் குழுவில் பங்கு, முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு ஆகியவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
பள்ளி மேலாண்மைக் குழு செயல்பாடு குறித்த வீடியோ ஒளிபரப்பப்பட்டது மாணவ, மாணவிகளின் பன்முகத் திறமைகள் வெளிப் படுத்தப்பட்டன. இதற்கு முன்பு பொறுப்பில் இருந்த பள்ளி மேலாண்மை குழு தலைவர் உறுப்பினர்கள் பாராட்டப்பட்டனர். ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சுகுமாறன், அனுசியா, சித்ரா, தமிழ்ச்செல்வி, அகிலா, அம்பிகா, சுமதி, ராணி ஆகியோர் செய்திருந்தனர்.
இதே போன்று பள்ளி விழிப்புணர்வு மேலாண்மை கூட்டம், மதுரை வரிச்சியூர் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் ஆர் சாந்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பங்கேற்ற மாணவர்களின் பெற்றோர் அனைவரையும் ஆசிரியர் செல்வி வரவேற்று பேசினார். ஆசிரியர் எமிமால் ஞானசெல்வி விளக்க உரை ஆற்றினார். ஆசிரியர் சுகன்யா நன்றி கூறினார்.