மதுரை கோரிப்பாளையத்தில் ஹஜ்ரத் காஜா சையது சுல்தான் அலாவுதீன் கா உள்ளது. இங்கு ஆண்டு தோறும் உரூஸ் எண்ணம் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.


இந்த ஆண்டிற்கான சந்தனக்கூடு திருவிழா கடந்த 15-ந் தேதி கொடி இறக்கத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியான சந்தனக்கூடு திருவிழா அதிகாலை கொடி ஏற்றத்துடன் சந்தனக்கூடு விழா தொடங்கியது.


இந்நிகழ்ச்சியை காண தமிழகத்திலிருந்து பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொள்வார்கள். முன்னதாக நேற்று மாலை 400-க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டது.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தர்கா மேனேஜிங் டிரஸ்டி பாஷல் பாஷா, டிரஸ்டிகள் சையது ரபீக், சையது ரசூல், சையது சலீம், சையது ரசூல் மற்றும் பரம்பரை இஸ்லாமிய பெருமக்கள் தர்கா ஹக்தார்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தர்கா மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் அலங்கார மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *