கோவையில் அகில இந்திய தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து
அகில இந்திய தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் ஆகஸ்ட் 30 ந்தேதி தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இந்நிலையில் , அவரது பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு 12 மணியளவில் அவரது இல்லத்திற்கு நேரடியாக சென்று காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து, கேக் வெட்டி பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
மாவட்ட செயலாளர் கே.குமரேசன் தலைமையில் நடைபெற்ற இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் சேக் பாய், ராமன், தீபக், சந்தோஷ், சஞ்சய், நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மயூரா ஜெயக்குமாருக்கு இனிப்புகள் வழங்கி, மலர்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
நள்ளிரவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அனைவரும் உற்சாகத்துடன் பங்கேற்று, மயூரா ஜெயக்குமாரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர்