தருமபுரி மாவட்டம் கவித்தேடல் பதிப்பகத்தின் நான்காம் ஆண்டை முன்னிட்டு கவித்தேடல் கலைச்சங்கமம் என்னும் பொருண்மையில் முப்பெரும் விழா நடைபெற்றது.இந்நிகழ்வு பள்ளப்பட்டி மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.
நிகழ்விற்கு தமிழ்மகன் ப.இளங்கோ தலைமை வகித்தார்மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளர் கா.கோவிந்த் விழாப் பேருரை ஆற்றினார்.
கவித்தேடல் பதிப்பகத்தின் நிறுவனர் மற்றும் பதிப்பாளர் கோகுல் காளியப்பன் வரவேற்று பேசினார்.பதிப்பகத்தின் தலைவர் காளியப்பன் பெருமாள், இயக்குனர் செல்வி காளியப்பன் முன்னிலை வகித்தனர்.,தகடூர் வாசகர் வட்டத்தின் தலைவர் கூத்தப்பாடி மா.பழனி, பாரதி பாவாணர் செந்தமிழ் வானம் அமைப்பின் நிறுவனர் சு.சோலைராஜா, செ.வெங்கடேசன், ஜெ.சண்முகநாதன், சிறப்புரையாற்றினார்.
பதிப்பக தயாரிப்பு நிர்வாகி தேவி முருகவேல் நன்றி கூறினார்.
நிகழ்வில் கவித்தேடல் பதிப்பகத்தின் நான்காம் ஆண்டு விழாவை முன்னிட்டு 51 நூல்கள் வெளியிடப்பட்டது.நிகழ்வில் பல்வேறு மாவட்ட படைப்பாளர்களின் நூல்கள் வெளியிடப்பட்டது. நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர்கள், பள்ளி கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், தமிழ் ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.