கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரைப் பயணம் நிறைவு பெற்றது.சமூக நீதியை நிலைநாட்டவும், கிராமப்புற மற்றும் முதல் தலைமுறை மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வினை முழுமையாக ரத்து செய்யக் கோரியும், ஏழை எளிய மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் உயர்ஜாதியினருக்கான EWS இட ஒதுக்கீட்டை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தியும் திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம் முன்னெடுக்கப்பட்டது
இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இப்பரப்புரைப் பயணம் அரவக்குறிச்சியில் தொடங்கி சின்னதாராபுரம் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
தோழர்களத்தை சேர்ந்த தோழர்கள் 50 பேருக்கும் மேற்பட்டோர் பங்கேற்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இப்பயணத்தை வெற்றியடைய கழகத்தின் கொள்கை முழக்கங்களைச் வீதிகள் தோறும் கொண்டு சேர்த்த அனைத்து
தோழர்களுக்கும்,வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும், நன்றிகளையும் தோழர் களம் நிறுவன தலைவர் தி.க சண்முகம் கூறி நிறைவு செய்தார்.இந்த பரப்புரை பயணத்தில் திராவிடர் கழக மாநில,மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகளும், தோழர்களம் பொறுப்பாளர்களும் பெருமளவில் கலந்து கொண்டார்கள்.