C K RAJAN
Cuddalore District Reporter
9488471235..
கடலூர்,
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் (31.08.2026) அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில்,
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை தீர்வுகாணவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய விசாரணை மேற்கொண்டு துறை சார்ந்த அலுவலர்கள் தகுதியான பயனாளிகளுக்கு அரசின் திட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.
இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 1075 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) தீபா, மாவட்ட வழங்கல் அலுவலர் தங்கமணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) பரஞ்ஜோதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கமலம், மாவட்ட பிற்படுத்தபட்டோர் நல அலுவலர் தமிழ்கனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.